7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
24. கோயில்
243. | அதிர்த்த அரக்கன் நெரிய விரலால் அடர்த்தாய் அருளென்று துதித்து மறையோர் வணங்குந் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள் உதித்த போழ்தில் இரவிக் கதிர்போல் ஒளிர்மா மணியெங்கும் பதித்த தலத்துப் பவள மேனிப் பரமன் ஆடுமே. (8) |
243. அதிர்த்த-ஆரவாரம் செய்த; (உமையை) ‘அஞ்சப் பண்ணிய’ என்றுமாம். அரக்கன்-இராவணன். அடர்த்தாய்- துன்புறுத்தினவனே. உதித்த போழ்தில் விளங்கும் இரவி’ என ஒருசொல் வருவிக்க. ‘மணி, மாணிக்கம்’ என்பது வெளிப்படை, தலம்-நிலம். |