சொல்லகராதிச் சுருக்கம்

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

24. கோயில்


244.

மாலோ டயனும்அமரர் பதியும்
   வந்து வணங்கிநின்
றால கண்டா அரனே யருளாய்
   என்றென் றவரேத்தச்
சேலா டும்வயல் தில்லை மல்கு
   சிற்றம் பலந்தன்னுள்
பாலா டும்முடிச் சடைகள் தாழப்
   பரமன் ஆடுமே.                             (9)
 


244. அமரர்    பதி-தேவர்கள் தலைவன்; இந்திரன், ஆலம்-நஞ்சு.
’ஆலா  கண்டா’ எனப்  பாடம்  ஓதி,  ‘ஆலால’  என்பது  குறைந்து
நின்றதாக உரைப்பினும் இழுக்கில்லை. ‘‘அவர்’’ என மீட்டும்  கூறியது,
அவரது  பெருமை  குறித்து.  ‘‘மல்கு சிற்றம்பலம்’’ என்பது  முன்னும்
வந்தது  (6).  பால் ஆடும்-சுற்றிலும் சுழன்றாடுகின்ற. ‘பாலாடும் சடை’
என இயையும். ‘பாலாடும் முடி’ என்று இயைத்து, ‘பாலில்  மூழ்குகின்ற
சென்னி’ எனவும் உரைப்பர். தாழ-நீண்டு விளங்க.


மேல்