சொல்லகராதிச் சுருக்கம்

9. சேதிராயர் திருவிசைப்பா

28. கோயில்


282.

விம்மி விம்மியே வெய்துயிர்த் தாளெனா
உம்மை யேநினைந் தேத்தும் ;ஒன் றாகிலள்
செம்ம லோர்பயில் தில்லையு ளீர்எங்கள்
அம்மல் ஓதி அயர்வுறுமே.                        (4)
 


282.   வெய்து உயிர்த்து-மூச்சு வெப்பமாக விட்டு. ஆள்-என்னை
ஆண்டுகொள்.  ஏத்தும்-துதிப்பாள்.  ஒன்று  ஆகிலள்-ஒரு  திறத்தும்
ஆகாள்;   ‘ஆற்றுகின்றிலள்’   என்றபடி.  இதனை  முற்றெச்சமாக்கி,
‘‘அயர்வுறும்’’    என்பதனோடு    முடிக்க.   செம்மலோர்-தலைமை
உடையோர்;  அந்தணர்.  பயில்-வாழ்கின்ற.  அம்  அல் ஓதி-அழகிய
இருள்போலும்  கூந்தலை  உடைய  மகள்.  இதனை முதற்கண்கூட்டுக.
அயர்வுறும்- சோர்வாள்.


மேல்