சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

3. கோயில்


32.

‘திருநீ றிடாஉருத் தீண்டேன்’ என்னும்;
   திருநீறு மெய்திரு முண்டந் தீட்டிப்
பெருநீல கண்டன் திறங்கொண்டிவள்
   பிதற்றிப் பெருந்தெரு வேதிரியும்;
‘வருநீ ரருவி மகேந்திரப்பொன்
   மலையில் மலைமக ளுக்கருளும்
குருநீ ’ என் னும்; ‘குணக் குன்றே’ என்னும்;
   குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.           (10)
 

32.     ‘திருநீறு  இடா  உருத்  தீண்டேன்’  என்றல்,  தில்லைக்
கூத்தப்பெருமானுக்கு   ஆகாதது.   தனக்கும்  ஆகாமை   பற்றியாம்.
‘மெய்யிலும் திருமுண்டத்திலும் தீட்டி’ என்க. முண்டம் -நெற்றி. பூசுதல்
வாளா  பூசுதலும்,  தீட்டுதல்  குழைத்து இடுதலும்  ஆகும். மெய்த்திரு
முண்டத்     திட்டு’    எனவும்    பாடம்    ஓதுப.   திறம் -புகழ்.
பிதற்றுதல்-பித்துக்கொண்டு    பேசுதல்.    இங்கும்   மகேந்திரமலை,
‘பொன்மலை’   எனப்பட்டது.   ‘‘அருளும்’’  என்றது,  ஆகமங்களை
அருளிச்செய்தமையை.     எனவே,     இவளும்    அதுநோக்கியே
காதல்மிக்காளாயினமை பெறப்பட்டது.  


மேல்