சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

3. கோயில்


26.

‘வெறியேறு பன்றிப்பின் சென்றொருநாள்
   விசயற் கருள்செய்த வேந்தே ! என்னும்;
‘மறியேறு சாரல் மகேந்திரமா
   மலைமேல் இருந்த மருந்தே என்னும்;
நெறியே ! ’என் னும்; ‘நெறி நின்ற வர்கள்
   நினைக்கின்ற நீதிவே தாந்தநிலைக்
குறியே ! ’ என் னும்; ‘ குணக் குன்றே! ’ என்னும்;
   குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.           (4)
 

26.    வெறி- செருக்கு.  மறி  ஏறு-மான்  கன்றுகள்  பொருந்திய.
நெறி-வீடுபெறும்  வகை,  சாதனம்.  பின்னர்   வரும், ‘‘குறி’’ என்பது,
இதனால்  எய்தும்  பயன்,  ‘‘நினைக்கின்ற, நீதி’’ என்னும்   இரண்டும்,
ஒருசொல்   தன்மைப்பட்ட   ‘‘வேதாந்த    நிலைக்குறி’’  என்பதனை
விசேடித்தன.  நீதி-எய்தும்  உரிமை. வேதாந்த நிலைக்குறி- வேதத்தின்
முடிநிலையாகிய குறிக்கோள். 


மேல்