சொல்லகராதிச் சுருக்கம் |
2. சேந்தனார் திருவிசைப்பா
7. திருவிடைக்கழி
75. | பரிந்தசெஞ் சுடரோ பரிதியோ மின்னோ பவளத்தின் குழவியோ பசும்பொன் சொரிந்தசிந் துரமோ தூமணித் திரளோ சுந்தரத் தரசிது என்னத் தெரிந்தவை திகர்வாழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற வரிந்தவெஞ் சிலைக்கை மைந்தனை அஞ்சொல் மையல்கொண் டையுறும் வகையே. (7) |
75. பரிந்த - வீசுகின்ற. சுடர் - விளக்கு. குழவி - கொழுந்து. |
மேல் |