சொல்லகராதிச் சுருக்கம்

2. சேந்தனார் திருவிசைப்பா

7. திருவிடைக்கழி


76.

வகைமிகும் அசுரர் மாளவந் துழிஞை
   வானமர் விளைத்ததா ளாளன்
புகைமிகும் அனலிற் புரம்பொடி படுத்த
   பொன்மலை வில்லிதன் புதல்வன்
திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில்
   திருக்குரா நீழற்கீழ் நின்ற
தொகைமிகு நாமத் தவன்திரு வடிக்கென்
   துடியிடை மடல் தொடங்கினளே.                (8)
 

76.  உழிஞை அமர். முற்றுகை இட்டுச் செய்யும் போர்.தாளாளன் -
வீரன்.  திகை  -  திசை.  தொகை  - எண் : அவை, நூறு,  ஆயிரம்,
நூறாயிரம்,  கோடி  முதலியவாம்.  நாமம்  -  பெயர்.   திருவடிக்கு -
திருவடியை  அடைதற்பொருட்டு  ;  என்றது ‘தன்னைப்  பணிகொள்ள
ஏற்றுக்     கொள்ளுதற்பொருட்டு’     என்றவாறு.    துடி    இடை
-உடுக்கைபோலும்    இடையை    உடையாள்.   ‘கடலன்ன   காமம்
உழப்பினும் பெண்டிர் மடல் ஏறுதல் இல்லை’ (குறள்-1137.)   ஆயினும்,
அவளது  பெருந்துயரைப்  புலப்படுத்த,  ‘மடல்  ஏறத்  தொடங்கினள்’
என்றாள். ‘மயல் தொடங்கினள்’ என்பதும் பாடம்.  


மேல்