சொல்லகராதிச் சுருக்கம்

2. சேந்தனார் திருவிசைப்பா

7. திருவிடைக்கழி


77.

தொடங்கினள் மடல் என் றணிமுடித் தொங்கற்
   புறஇத ழாகிலும் அருளான்
இடங்கொளக் குறத்தி திறத்திலும் இறைவன்
   மறத்தொழில்  வார்த்தையும்  உடையன்  
திடங்கொள்வை  திகர்வாழ் திருவிடைக் கழியில்

   திருக்குரா நீழற்கீழ் நின்ற
மடங்கலை மலரும் பன்னிரு நயனத்
   தறுமுகத் தமுதினை மருண்டே.                 (9)
 

77,     தொங்கல்  -  மாலை,  புறஇதழ்    சிறப்பில்லாததாகலின்,
‘அதனையேனும்  கொடுத்திலன்’  என்றாள்.   இடங்கொள் அக்குறத்தி
திறத்திலும்    -      தன்பால்        இடங்கொண்டு     இருக்கும்

வள்ளியது     தன்மையைக் காட்டிலும், மறத்தொழில்   வார்த்தையும்
உடையன்  - பகைத்தொழிலையுடைய சொற்களையும் இவள் ( தலைவி)
கூற்றில்    உடையனாகின்றான்.    தன்   கணவனை   மற்றொருத்தி
காதலித்தலை     அறியின்    அவளிடத்தில்     வள்ளியம்மைக்குப்
பகையுண்டாதல்   இயல்பாதலின்,  ‘அவளினும்  பகை  வார்த்தையை
உடையன்’  என்றாள். ‘மாலை கொடாமையேயன்றி’  என்னும் பொருள்
தருதலின்,  ‘‘வார்த்தையும்’’  என்ற  உம்மை  இறந்து தழுவிய எச்சம்.
மடங்கல் - சிங்கம். ‘‘அமுதத்தினை’‘ என்றதன்  பின்னர், ‘கண்டு’ என
ஒருசொல் வருவிக்க  


மேல்