சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

8. கோயில்


81.

இவ்வரும் பிறவிப் பௌவநீர் நீந்தும்
   ஏழையேற் கென்னுடன் பிறந்த
ஐவரும் பகையே யார்துணை யென்றால்
   அஞ்சலென் றருள்செய்வான் கோயில்
கைவரும் பழனம் குழைத்தசெஞ் சாலிக்
   கடைசியர் களைதரு நீலம்
செய்வரம் பரும்பு பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே.                 (2)
 

81.   ‘இப் பௌவநீர்’ என இயைத்து, ‘நீந்துதற்கரிய   பிறவியாகிய
கடல்நீரை   நீந்துகின்ற   ஏழையேனுக்கு’   என   உரைக்க.   ஐவர்
ஐம்பொறிகள்.              ‘உடன்பிறந்தோர்       அனைவருமே
பகையாய்விட்டமையின்  எனக்கு யார் துணை’ என்றவாறு.  கை வரும்
பழனம்-பக்கங்களில் பொருந்தியுள்ள வயல்களில்,   குழைத்த-தளிர்த்த.
செஞ்சாலி-செந்நெற்  பயிர்.  ‘நீலப் பூக்களின் கொடிகளே களைகளாய்
உள்ளன’  என்றபடி-செய் வரம்பு அரும்பு-வயல்களின்   வரப்புக்களில்
காணப்படுகின்ற.  


மேல்