சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

9. கோயில்


99. 


 

குமுதமே திருவாய் ; குவளையே களமும் ;
   குழையதே யிருசெவி ; ஒருபால்
விமலமே கலையும் உடையரே ; சடைமேல்
   மிளிருமே பொறிவரி நாகம் ;

கமலமே வதனம் ; கமலமே நயனம் ;
   கனகமே திருவடி நிலை ; நீர்
அமலமே யாகில் அவரிடம் களந்தை
   அணிதிகழ் ஆதித்தேச் சரமே.                 (9)
  

99.     குமுதம்,    இங்குச்  செவ்வாம்பல்   மலரைக்  குறித்தது.
குவளை-நீலோற்பல  மலர்.  களம்- கழுத்து. ‘குழையது‘    என்பதில் 
அது,       பகுதிப்பொருள்      விகுதி.     வேண்டும்   சொற்கள்

வருவித்து,     ‘இருசெவிக்கண்ணும்’ என ஈற்றில் தொக்கு      நின்ற
உருபும்,  உம்மையும்  விரித்து,  ‘ஒரு குழையே இருசெவிக்  கண்ணும்
உள்ளது’   எனப்   பொருள்  உரைத்து,  ‘இருசெவிகளுள்  ஒன்றிலே
குழையுள்ளது’  என்பது  அதனாற்போந்த பொருளாக உரைக்க.  குழை
உள்ளது     வலச்செவியில்;     இடச்செவியில்    தோடு    உளது.
’விமலம்-தூய்மை,  பொறி-புள்ளி.  வரி-கீற்று.   திருவடிநிலை-பாதுகை;
பின்னரும் பாதுகை கூறுவர். நீர்-நீர்மை  


மேல்