சொல்லகராதிச் சுருக்கம்

4. பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா

19. கோயில்


194.

சேடர் உறைதில்லைச் சிற்றம் பலத்தான்றன்
ஆடல் அதிசயத்தை ஆங்கறிந்து பூந்துருத்திக்
காடன் தமிழ்மாலை பத்துங் கருத்தறிந்து

பாடும் இவைவல்லார் பற்றுநிலை பற்றுவரே.          (10)

திருச்சிற்றம்பலம்
 


194.   சேடர்-தொண்டர். ‘பூந்துருத்திக் காடன் சிற்றம்பலத்தான்றன்
ஆடல்   அதிசயத்தை   அறிந்து  கருத்து  அறிந்து    பாடும் தமிழ்
மாலையாகிய  இவை  பத்தும் வல்லார், பற்றிய நிலை பற்றுவர்’ எனக்
கொண்டு   கூட்டுக.  கருத்து  பாடக்  கொள்ளும் பொருள்.   பற்றும்
நிலை-அடையத்தக்க நிலை; வீடு. பற்றுவர்-அடைவர்.


மேல்