4. பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா
19. கோயில்
189. | களையா உடலோடு சேரமான் ஆரூரன் விளையா மதம்மாறா வெள்ளானை மேல்கொள்ள முளையா மதிமுடி மூவா யிரவரொடும் அளையா விளையாடும் அம்பலம்நின் ஆடரங்கே. (5) |
189. ‘சேரமானொடு’ என உடனிகழ்ச்சிப் பொருளில் வரும் ஓடுவுருபு விரிக்க. ‘மதம் விளையா’ என மாற்றுக. விளையா - விளைந்து; பெருகி. மாறா - நீங்காத. மேற்கொள்ள - ஏறிச் செல்லும்படி. முளையாம் - இளைதாகிய. அளையா - கலந்து. ‘மேற்கொள்ள விளையாடும்’ என இயையும். ‘மேல் கொள்ள விளையாடும் அம்பலம் நின் ஆடரங்கே’ என்றாராயினும். ‘மேல்கொள்ள விளையாடி ஆடு அரங்கு அம்பலமே’ என்பது கருத்தென்க. |