8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா
26. கோயில்
264. | சேயிழை யார்க்கினி வாழ்வரிது திருச்சிற்றம் பலத்தெங்கள் செல்வ னேநீ தாயினும் மிகநல்லை யென்ற டைந்தேன் தனிமையை நினைகிலை சங்க ராஉன் பாயிரும் புலியத ளின்னு டையும் பையமே லெடுத்தபொற் பாத முங்கண் டேயிவள் இழந்தது சங்கம் ஆவா எங்களை ஆளுடை ஈசனேயோ! (8) |
264, ‘தாயினும் மிக நல்லையாகிய நீ இவளது தனிமைத் துயரை நினைகின்றாய் இல்லை’ என்றபடி. ‘‘பால்நினைந் தூட்டும் தாயினும் சாலப் பரிந்து’’ என்னும் திருவாசகத்தை நோக்குக பிடித்த-9). ‘‘சங்கரா’’ என்றதும், நீ சுகத்தைச் செய்பவன் அல்லையோ என்னும் குறிப்புடையது ‘உன்உடை’ என இயையும். ‘பாய் புலி, இரும் புலி’ என்க; இரு-பெரிய. அதள்-தோல். ‘‘அதளின்’’ என்பதில் இன். அல்வழிக்கண் வந்த சாரியை. ‘‘அதளின்னுடை’’ என்றதில் னகர ஒற்று விரித்தல். ‘இவள் சங்கம் இழந்தது, உனது உடையையும், பாதத்தையும் கண்டே‘ என்க. ஆவா, இரக்கக் குறிப்பு. ஓகாரமும் அன்னது. இத்திருப்பாட்டு ஒன்றும் செவிலி கூற்று. ஏனைய தலைவி கூற்று, |