சொல்லகராதிச் சுருக்கம்

8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா

27. கோயில்


277.

நோக்காத தன்மையால் நோக்கிலோம் யாம்என்று
மாற்காழி ஈந்து மலரோனை நிந்தித்துச்
சேக்கா தலித்தேறுந் தில்லைச்சிற் றம்பலவர்
ஊர்க்கேவந் தென்வளைகள் கொள்வாரோ ஒண்ணுதலீர்! (10)
 


277,     ‘‘மாற்கு ஆழி ஈந்து’’ என்பதை, ‘‘நிந்தித்து‘‘   என்பதன்
பின்னர்க்  கூட்டுக.  நோக்காத  தன்மையால்-நீ எம்மை  முதற்கடவுள்
என்று   மதித்தலைச்  செய்யாத  காரணத்தால்.  யாம்  நோக்கிலோம்
என்று-   நாம்   உன்னை   நம்  அடியவருள்  ஒருவனாகக்  கருதி
இரங்கிலோம்    என்று    சொல்லி.   மலரோன்-பிரமன்.  அவனை
நிந்தித்தமை.    அவனது   நடுத்தலையை   உகிரால்    அறுத்தமை.
‘திருமாலுக்கு  ஆழி  (சக்கரம்) ஈந்ததும், அறக் கடவுளை ஊர்தியாகக்
கொண்டதும் அவர்களது வழிபாட்டினால்’ என்பது பிரமனுக்குக் கூறிய
குறிப்புப் பற்றி வருவித்துக்கொள்ளப்படும். ஊர்க்கே வந்து - ஊரினுள்
தானே வந்து, ‘வழிபடுபவர்க்கு அளியும், வழிபடாதோர்க்குத் தெறலும்
செய்கின்ற  இவர் வழிபாடுடைய என்மாட்டுத் தெறலைச் செய்கின்றது
என்றோ’ என்பதாம்.


மேல்