சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

3. கோயில்


34.

‘வேறாக, உள்ளத் துவகைவிளைத்
   தவனச் சிவலோக, வேத வென்றி
மாறாத மூவா யிரவரையும்,
   எனையும் மகிழ்ந்தாள வல்லாய்! ’ என்னும்;
‘ஆறார் சிகர மகேந்திரத்துன்
   அடியார் பிழைபொறுப் பாய்! அமுதோர்
கூறாய்! ’என் னும்; ‘குணக் குன்றே!’ என்னும் ;
   குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.          (12)

திருச்சிற்றம்பலம்
 


34.     ‘‘வேறாக  உள்ளத்து   உவகை   விளைத்து’’  என்பதை’
‘‘ஆளவல்லாய்’’   என்பதன்  முன்னர்க்  கூட்டுக. வேறாக - தனியாக;
என்றது.    ‘அந்தரங்க    உரிமையாக’     என்றபடி.    தன்னையும்
மூவாயிரவரொடு  படுத்து  இவள்  இவ்வாறு   கூறியது,  தனது காதல்
மிகுதியாலாம்.    எனவே,    இதனான்    இவ்வாசிரியரது  பேரன்பு
விளங்குவதாம்.  அவனிச்  சிவலோகம் - தில்லை, ‘அவனிச் சிவலோக
மூவாயிரவர்’  என, இயையும். ‘தில்லை அவனிச் சிவலோகம்’  எனவே,
அதன்கண்  வாழும்  மூவாயிரவர் அவனிச் சிவர் என்பது   விளங்கும்.
இதனை  ‘‘நீலத் தார்கரி  யமிடற்றார்நல்ல  நெற்றிமேல்   உற்ற
கண்ணீனார்பற்று-சூலத்தார்சுட லைப்பொடி நீறணி வார்சடையார்

-சீலத் தார்தொழு தேத்துசிற்  றம்பலம்’’    (திருமுறை-3,  1,  3) என
அருளிச்செய்தமையானும்,    அவ்வருளிச்செயலின் வரலாற்றாலும் (பெ.
பு. ஞானசம்-168-174) நன்குணர்ந்து கொள்க. வேத  வன்றி- வேதத்தை
ஓதுதலானும்,  அதன்வழி  வேட்டலானும்  பெற்ற வெற்றி. ‘இவ்வெற்றி
என்றும் மாறாது  நிற்கும் மூவாயிரவர்’ என்க. ஆறு ஆர் சிகரம்- பல
யாறுகள்  பொருந்திய  கொடுமுடி.  பொருந்துதல், தோன்றுதல்  இனி,
‘வான  யாற்றை அளாவிய சிகரம்’ என்றலுமாம். ‘‘உன் அடியார் பிழை
பொறுப்பாய்’’   என்றது    தம்பாடலைப்  பொறுக்கவேண்டுமென்னும்
குறிப்பினது.  இஃது  ஒரு  பெயர்த்  தன்மைப்பட்டு,  ‘‘மகேந்திரத்து’’
என்றதனை  முடித்தது.  அமுது-பெண்ணமுதாய மலைமகள். ‘மாதோர்
கூறாய்’ என்பது பாடம் அன்று.


மேல்