சொல்லகராதிச் சுருக்கம் |
2. சேந்தனார் திருவிசைப்பா
6. திருவாவடுதுறை
68. | பாலும் அமுதமும் தேனுமாய் ஆனந்தந் தந்துள்ளே பாலிப்பான் போலும்என் ஆருயிர்ப் போகமாம் புரகால காம புராந்தகன் சேலுங் கயலுந் திளைக்கும்நீர்த் திருவா வடுதுறை வேந்தனோ டாலு மதற்கே முதலுமாம் அறிந்தோம் அரிவைபொய் யாததே. (11) திருச்சிற்றம்பலம் |
68. ‘‘தேனுமாய்’’ என்ற ஆக்கம், உவமை குறித்து நின்றது. |
மேல் |