சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

1. கோயில்


10.

மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்
   கருள்புரி வள்ளலே ! மருளார்
இடங்கொள்முப் புரம்வெந் தவியவை திகத்தேர்
   ஏறிய ஏறுசே வகனே!
அடங்கவல் லரக்கன் அரட்டிரு வரைக்கீழ்
   அடர்த்தபொன் னம்பலத் தரசே!
விடங்கொள்கண் டத்தெம் விடங்கனே உன்னைத்
   தொண்டனேன் விரும்புமா விரும்பே.            (10)
 

10. மடங்கல்- சிங்கம்; நரசிங்கம். கனகன்-‘இரணிய கசிபு’ என்னும்
அசுரன்.    இவ்வடி,    சரப     வரலாற்றைக்    குறித்தல்  கூடும்.
மருளார்-மருட்சியுடையவரது.  திரிபுரத்தசுரர்   புத்தன் போதனையால்
மயங்கிச்    சிவநெறியைக்    கைவிட்டவராதல்    அறிக.  வைதிகத்
தேர்-வேதத்தைக் குதிரையாகக்  கொண்ட  தேர். ஏறு சேவகன்- மிக்க
வீரத்தை  யுடையவன். அரக்கன்-இராவணன். அரட்டு - செருக்கு. இரு
வரை-பெரிய  மலை,  ‘அருட்டிரு வரைக்கீழ்‘ எனவும்  பாடம் ஓதுவர்.
விடங்கன்-அழகன். 


மேல்