சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

10. திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்


108.
  


 

தன்னக மழலைச் சிலம்பொடு சதங்கை
   தமருகம் திருவடி திருநீ
றின்னகை மாலை கங்கைகொங் கிதழி
   இளம்பிறை குழைவளர் இளமான
கின்னரம் முழவம் மழலையாழ் வீணை
   கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மன்னவன் மணியம் பலத்துள் நின்றாடும்
   மைந்தன்என் மனத்துள்வைத் தனனே.           (8)
 

108. ‘தன்னகத்துள்ள    சிலம்பு   முதலாக மான்  ஈறாயினவற்றை 
என்     மனத்து    வைத்தான்’    என்க.     அகம்,       ஏழன்
உருபு.     மழலைச் சிலம்பு-மெல்லிய ஓசையையுடைய       சிலம்பு.
இன்னகையும் இறைவனுடையதே ; இதனைக் கங்கைக்கு  ஆக்குவாரும்
உளர்.  மழலைக்  கங்கை-இனிய  ஓசையையுடைய  கங்கை.  கொங்கு
இதழி-தேனை யுடைய கொன்றை மாலை. ‘கோங்கிதழி’ என்பது பாடம்
அன்று. வளர் இள மான்-வளர்தற்குரிய இளைய மான் ;  ‘மான் கன்று’
என்றபடி. கின்னரம், ஓர் நரம்புக் கருவி, முழவம்-மத்தளம்.  


மேல்