3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
17. திருவிடைமருதூர்
180. | வையவாம் பெற்றம் பெற்றம்ஏ றுடையார் மாதவர் காதல்வைத் தென்னை வெய்யவாஞ் செந்தீப் பட்டஇட் டிகைபோல் விழுமியோன் முன்புபின் பென்கோ நொய்யவா றென்ன வந்துள்வீற் றிருந்த நூறுநூ றாயிர கோடி மையவாங் கண்டத் தண்டவா னவர்கோன் மருவிடந் திருவிடை மருதே. (8) |
180, ‘‘முன்பு பின்பு என்கோ’’ என்பதனை முதலில் வைத்து, ’முன்பென்பேனா பின்பென்பேனா’ எனப் பொருள் கூறி, அதனை, ‘‘வந்து உள்வீற்றிருந்ததனை’’ உட்கொண்டு கூறியவாறாக உரைக்க. ‘உள்வீற்றிருந்தது ஒருகாலத்தன்று; என்றுமே யாம்’ என்றவாறு. இதன்பின், விழுமியோன் வை அவாம் பெற்றம் பெற்று என்னை, வெய்யவாம் செந்தீப்பட்ட இட்டிகைபோல் அம் ஏறுடையார் மாதவர் காதல் வைத்து’ எனக் கொண்டு கூட்டியுரைக்க. விழுமியோன்-யாவரினும் மேலானவன்; இதுவும் இறைவனையே குறித்தது, வை அவாம் பெற்றம் பெற்று-வைக்கோலை விரும்புகின்ற எருதினை ஊர்தியாகக் கொண்டு. இட்டிகை-செங்கல். ‘மண்ணால் ஆக்கப்படுகின்ற இது, செந்தீயில் வெந்தபின் உரம் பெற்று நிற்றல்போல், பாசத்தால் கட்டுண்டு எளியனாய் நின்ற யானும் ஞானத்தால் திண்ணியனாகும்படி’ என்றவாறாம். ‘போல ஆகும்படி’ என்னும் பொருட்டாகிய, ‘போல’ என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. அம் ஏறுடையார் மாதவர் காதல் வைத்து-அழகு மிக்கோராகிய அடியாரது அன்பிலே நிற்கச்செய்து. அழகு - அருட்பொலிவு ; அடியவர்க்கு ஏவல் செய்து நிற்பின், அஞ்ஞானம் நுழைதற்கு வாயில் இல்லாமை அறிக. நொய்ய ஆறென்ன-எளிய பொருள்போல. ‘‘ஆறு’’ என்றது, அதனாற் கிடைக்கும் பொருளை யுணர்த்திநின்றது. ‘வீற்றிருந்த கோன்’ என இயையும். மை-மேகம். இங்கு, ‘அவாம்’ என்பது உவம உருபாய் நின்றது. ‘விழைய’ என்பதோர் உவம உருபும் உளதாதல் அறிக. ருமை மிகுதி உணர்த்தற்கு. ‘நூறுநூறாயிர கோடி மேகம் போலும்’ என்றார். |
|