சொல்லகராதிச் சுருக்கம்

4. பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா

19. கோயில்


193.

உருவத் தெரியுருவாய் ஊழிதோ றெத்தனையும்
பரவிக் கிடந்தயனும் மாலும் பணிந்தேத்த
இரவிக்கு நேராகி ஏய்ந்திலங்கு மாளிகைசூழ்ந்
தரவிக்கும் அம்பலமே ஆடரங்க மாயிற்றே.           (9)
 

193.     உருவத்து-அழகையுடைய.   ‘எரியுருவாய் ஆடு அரங்கம்’
எனவும்,   ‘ஏத்த  ஆடு  அரங்கம்’ எனவும்    இயையும்.  ‘அரங்கம்
மாளிகை   சூழ்ந்து   அரவிக்கும்   அம்பலமே   ஆயிற்று’   என்க.
இரவி-சூரியன். அரவிக்கும் -ஒலியை உண்டாக்குகின்ற.


மேல்