7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
22. கோயில்
223. | செற்று வன்புரந் தீயெழச்சிலை கோலி ஆரழல் ஊட்டினான் அவன் எற்றி மாமணிகள் எறி நீர்த்தில்லை யம்பலவன் மற்றை நாட்ட மிரண்டொ டுமல ருந்திரு முகமும் முகத்தினுள் நெற்றி நாட்டமன்றே நெஞ்சு ளேதிளைக் கின்றனவே. (9) |
223. செற்று- சினந்து. சிலை-வில். கோலி-வளைத்து. ‘‘அவன்’’ என்பது பகுதிப்பொருள் விகுதி. நாட்டம்-கண், ‘‘நெற்றி நாட்டம்’’ என்பதில் எண்ணும்மை தொகுக்கப்பட்டது. திளைக்கின்றன - உலாவுகின்றன. |