சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

3. கோயில்


31.

‘தரவார் புனம்சுனைத் தாழ் அருவி,
   தடங்கல் லுறையும் மடங்கலமர்
மரவார் பொழில், எழில் வேங்கை எங்கும்
   மழைசூழ் மகேந்திர மாமலைமேற்
சுரவா ! என் னும் ; ‘சுடர் நீள மடிமால்
   அயன் இந் திரன்முதல் தேவர்க்கெல்லாம்
குரவா! ‘என் னும் ; ‘குணக் குன்றே’ என்னும்;
   குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.            (9)
 

31.  தர  வார்  புனம்  - மேலான  நீண்ட புனம்.  சுனைத்  தாழ்
அருவி-சுனையினின்றும்  வீழ்கின்ற அருவி. ‘‘கல்’’  என்றது முழையை.
மடங்கல்-சிங்கம்.   மடங்கல்   ‘அமர்’   பொழில்’   என்க.   இருள்
மிகுந்திருத்தலின், முழையில் தங்கும், சிங்கம் இங்குத்  தங்குவதாயிற்று.
மரவு    ஆர்    பொழில்-குங்கும    மரம்    நிறைந்த    சோலை.
வேங்கை-வேங்கை மரம்’ இதனை வேறு கூறினார். மலை  நிலத்திற்குச்
சிறந்த  மரமாதல்  பற்றி.  மழை-மேகம்  ‘ஏங்கும்’   என்பதும் பாடம்.
‘புனம்,  அருவி,  பொழில்,  வேங்கை  முதலிய  எங்கும்   மேகங்கள்
தவழ்கின்ற  மகேந்திர  மாமலை  ’  என்க.  ‘சுரவன்’  என விரித்தல்
பெற்று  விளியேற்று,   ‘சுரவா’ என  நின்றது. சரன்-தேவன் ‘‘குரவன்’’
என்றது. ‘தந்தை, தாய், அரசன், ஆசிரியன்’   என்னும்    அனைத்துப்
பொருளையும் குறிக்கும்.


மேல்