சொல்லகராதிச் சுருக்கம்

2. சேந்தனார் திருவிசைப்பா

5. திருவீழிமிழலை


50.

‘இத்தெய்வ நெறிநன்’ றென்றிருள் மாயப்
   பிறப்பறா இந்திர சாலப்
பொய்த்தெய்வ நெறிநான் புகாவகை புரிந்த
   புராணசிந் தாமணி வைத்த
மெய்த்தெய்வ நெறிநான் மறையவர் வீழி
   மிழலைவிண் ணிழிசெழுங் கோயில்
அத்தெய்வ நெறியிற் சிவமலா தவமும்
   அறிவரோ அறிவுடை யோரே!                  (5)
 

50.    இருள்-அறியாமை.   மாயம்-நிலையாமை  ‘இவற்றையுடைய
பிறப்பு’    என்க.    அறா  -   அறுத்து     உய்விக்க   மாட்டாத.

இம்மாட்டமை     உடையவாயினும்,    மாட்டுவபோலச்  சொற்சாலம்
செய்தல்  பற்றி,  ‘‘இந்திர  சால  நெறி’’ என்றார்.  ‘‘பொய்’’  என்றது
போலியை.    ‘பொய்த்    தெய்வங்களைக்கொண்ட   நெறி’   என்க.
புரிந்த-இடைவிடாது  நின்று அருள்செய்த. புராண சிந்தாமணி- பழைய
(எல்லாப் பொருட்கும்  முன்னே     உள்ள)    சிந்தாமணி;  என்றது.
சிவபெருமானை. வைத்த-அமைத்த.  ‘மெய்த்  தெய்வ  நெறியையுடைய
நான்மறையோர்’ என்க. கோயிற்கண் உள்ளதும், அத்தெய்வ நெறிக்கண்
விளங்குவதும்  ஆகிய    சிவம்’    என்க.    அவம் - பயனில்லாத
பிறபொருள்கள். அறிவரோ-பொருளாக நினைப்பரோ! நினையார்.  


மேல்