சொல்லகராதிச் சுருக்கம்

2. சேந்தனார் திருவிசைப்பா

6. திருவாவடுதுறை


60.

நினைக்கும் நிரந்தர னேயென்னும்
   நிலாக்கோலச் செஞ்சடைக் கங்கைநீர்
நனைக்கும் நலங்கிளர் கொன்றைமேல்
   நயம்பேசும் நன்னுதல் நங்கைமீர்
மனக்கின்ப வெள்ள மலைமகள்
   மணவாள நம்பிவண் சாந்தையூர்
தனக்கின்பன் ஆவடு தண்டுறைத்
   தருணேந்து சேகரன் என்னுமே.                 (3)
 

60.     “நினைக்கும்”   என்றது   முற்று.   நிரந்தரன் -   நிலை
பெற்றிருப்பவன்.  நிலாக்  கோலம்  - நிலாவினால் உண்டாகிய அழகு.
நயம்  -விருப்பம்.  பேசும்  - வெளிப்படையாக எடுத்துச்  சொல்வாள்.
“நங்கைமீர்’’   என்றது   முதலியன,   தலைவி   கூற்றைச்   செவிலி
அங்ஙனமே  கொண்டு  கூறியது.  “ நங்கைமீர்” என்றதனைச் செவிலி
கூற்றெனினும்   இழுக்காது  “  மனக்கு”  என்றதில்   அத்துச்சாரியை
தொகுத்தல்.   மனக்கு   இன்பவெள்ளம்-என்    மனத்துக்கு   இன்ப
வெள்ளமாய்  இருப்பவன்.  “நம்பி  இன்பன்,   தருணேந்து  சேகரன்

என்றவை, ஒரு பொருள்மேற்     பல  பெயர். சாந்தையூர் என்றதில்,
‘‘ஊர்’’ என்றது. அதன்கண்   வாழ்வாரை.   தருண  இந்து  சேகரன்
- இளமையான சந்திரனை அணிந்த முடியை உடையவன்.  


மேல்