சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

8. கோயில்


89.

 

உம்பர்நா டிம்பர் விளங்கியாங் கெங்கும்
   ஒளிவளர் திருமணிச் சுடர்கான்
றெம்பிரான் நடஞ்செய் சூழலங் கெல்லாம்
   இருட்பிழம் பறஎறி கோயில்
வம்புலாங் கோயில் கோபுரம் கூடம்
   வளர்நிலை மாடமா ளிகைகள்
செம்பொனால் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே.                  (10)
 

89.     உம்பர்      நாடு-தேவர்          உலகம்.     இம்பர்
விளங்கியாங்கு - இவ்வுலகத்தில்  வந்து  விளங்கினாற்போல.  எங்கும்

ஒளி   வளர்-எவ்விடத்திலும் ஒளி பரத்தற்கு ஏதுவான.     திருமணிச்
சுடர்-அழகிய  இரத்தினங்களின் ஒளி. கான்று-உமிழ்ந்து.  சூழல்-இடம்.
‘சூழல்  எறி’  என  இயையும்.  ‘சூழலாய்’  என  ஆக்கம்  வருவிக்க.
அங்கெல்லாம்-தன்   இடமெல்லாம்.  வம்பு  உலாம்  கோயில்-புதுமை
பொருந்திய  தலைமை  வாய்ந்த இல்லங்களும். வளர்  நிலை-உயர்ந்த
பல  நிலைகளையுடைய.  செம்பொனால் அரும்பு-சிவந்த  பொன்னால்
இயன்று தோன்றுகின்ற.


மேல்