சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

8. கோயில்


88.

பின்னுசெஞ் சடையும் பிறைதவழ் மொழுப்பும்
   பெரியதங் கருணையுங் காட்டி
அன்னைதேன் கலந்தின் னமுதுகந் தளித்தாங்
   கருள்புரி பரமர்தங் கோயில்
புன்னைதேன் சொரியும் பொழிலகங் குடைந்து
   பொறிவரி வண்டினம் பாடும்
தென்னதேன் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே.                  (9)
 

88.     மொழுப்பு-முடி. ‘அன்னை அளித்தாங்கு’ என   இயையும்.
பொழில்   அகம்   குடைந்து-சோலைகளின்   உள்ளே    மலர்களில்
மகரந்தத்தைக்  கிண்டி. தென்ன தேன்-‘தென்ன’என்கின்ற  இசையாகிய
தேன். ‘தென்ன புலியூர்’ என்று இயைத்து, ‘அழகினை யுடைய புலியூர்’
என்றும் உரைப்ப.


மேல்