3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9. கோயில்
97. | திக்கடா நினைந்து நெஞ்சிடிந் துருகுந் திறத்தவர் புறத்திருந் தலச, மைக்கடா அனைய என்னையாள் விரும்பி மற்றோரு பிறவியிற் பிறந்து பொய்க்கடா வண்ணங் காத்தெனக் கருளே புரியவும் வல்லரே; எல்லே அக்கடா வாகில்; அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே. (7) |
97. திக்கு அடா நினைந்து-பலதிசைகளிலும் அடுத்து நினைந்து ; என்றது, (இறைவனை) ‘எங்கும் தேடி அலைந்து’ என்றபடி. இடிந்து-துயருற்று புறத்து இருந்து-ஆட்கொள்ளப்படாமல் இருந்து, அலச-மெலிய. மைக் கடா-கரிய நிறம் பொருந்திய கடா ; எருமைக் கடா இஃது உணர்வின்மை பற்றி வந்த உவமை. ஆள்-அடிமை, ‘‘ஆளாக’’ என ஆக்கம் விருவிக்க. பொய்-நிலையாமை. ‘‘பொய்க்கு’’ என்ற நான்கனுருபை, இரண்டனுருபாகத் திரிக்க. அடா வண்ணம்-பொருந்தாதபடி. ‘‘புரியவும்’’ என்ற உம்மை. சிறப்பு. கல்லில் நார் உரித்ததுபோன்ற செயலாதல் பற்றி, ‘வல்லரே’ என்றார், ‘‘எல்லே’’ என்பது ‘என்னே’ என்பது போன்றதோர் இடைச்சொல் ; இஃது இங்கு இறைவரது கருணையை வியந்த வியப்பின்கண் வந்தது. ‘அக்கடா’ |
என்பது அமைதிக் குறிப்புத் தருவதோர் இடைச்சொல்லாய் வழங்கும், கலலையின்றி இருப்பவனை, ‘அக்கடா என்று இருந்தான்’ என்பர். ‘‘அக்கடாவாகில்’’ என்றதற்கு, ‘எனக்கு அமைதி உண்டாயிற்றாயின்’ எனவும், ‘‘அவர்’’ என்றதற்கு, ‘அதற்கு ஏதுவாய அவர்’ எனவும் உரைக்க |