சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

16. தஞ்சை இராசராசேச்சரம்


172.

சரளமந் தார சண்பக வகுள
   சந்தன நந்தன வனத்தின்
இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவரை
அருமருந் தருந்தி அல்லல்தீர் கருவூர்
   அறைந்தசொன் மாலைஈ ரைந்தின்
பொருள்மருந் துடையோர் சிவபத மென்னும்
   பொன்னெடுங் குன்றுடை யோரே.              (11)

திருச்சிற்றம்பலம்
 


172.  சரளம் -  தேவதாரு.  வகுளம் -  மகிழ்.  நந்தன வனத்தின் 
இருள்விரி       மொழுப்பின்        இஞ்சி     -     நந்தவனத் 
தின்     அருள்      அடர்ந்த   உச்சியை        உடைய   மதில்.
அருமருந்து-காயகற்பம்.  இவ்வாசிரியர்   காயகற்பம் அருந்தி நெடுநாள்
வாழ்ந்தார்     என்ப.    அல்லல்-இறப்புத்     துன்பம்.    பொருள்
மருந்து-சொற்பொருளாகிய அமிர்தம்.


மேல்