சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

4. கோயில்


35.

இணங்கிலா ஈசன் நேசத்
   திருந்தசித் தத்தி னேற்கு
மணங்கொள்சீர்த் தில்லை வாணன்
   மணவடி யார்கள் வண்மைக்
குணங்களைக் கூறா வீறில்
   கோறைவாய்ப் பீறற் பிண்டப்
பிணங்களைக் காணா கண்: வாய்
   பேசாதப் பேய்க ளோடே.                     (1)
 

35.  இணங்கு-ஒப்பு. ‘சித்தத்தினேற்குக் கண் காணா; வாய் பேசாது’
என இயையும். எனவே, இஃது ஏனைத்  திருப்பாட்டுக்களினும் சென்று
இயைவதாதல் அறிக. மணங்கொள்-பல விழாக்களைக்கொண்ட ‘தில்லை
வாணனது   மணத்தை   (கூட்டத்தை)ப்   பெற்ற   அடியார்’  என்க.
வண்மை-வளப்பம்;   சிறப்பு.  வீறுஇல்-பெருமை  இல்லாத,  ‘கோரம்’
என்பதில்,   ரகரம்   றகரமாயும்,   அகரமாயும்    திரிந்து  நின்றன.
கோரம்-கொடுமை.   பீறல்  பிண்ட-ஓட்டை   உடம்பையுடைய. உயிர்
வாழ்தலால்  பயன்  இன்மையின்,  ‘‘பிணங்கள்’’  என இகழ்கின்றவர்,
அக்காரணத்தானே     உடம்பின்      இயல்பை   விதந்தோதினார்.
பிதற்றுதலுடைமை பற்றி, ‘பேய்கள்’ என்றார்.  


மேல்