சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

16. தஞ்சை இராசராசேச்சரம்


163.


  

நெற்றியிற் கண்ணென் கண்ணினின் றகலா ;
   நெஞ்சினில் அஞ்சிலம் பலைக்கும்
பொற்றிரு வடிஎன் குடிமுழு தாளப்
   புகுந்தன போந்தன வில்லை ;
மற்றெனக் குறவென் ! மறிதிரை வடவாற்
   றிடுபுனல் மதகில்வாழ் முதலை
எற்றுநீர்க் கிடங்கின் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.                   (2)
 

163.  ‘அகலாது’  என்பது,  ஈறு   குறைந்தது.  ‘நெஞ்சில் புகுந்தன’ 
என    இயையும்.    பொன்   -   அழகு.    திரு   -   மேன்மை.
போந்தன     இல்லை-புறத்துச்   செல்லவில்லை.    ‘இங்ஙனமாகலின்
எனக்கு  மற்று  உறவு  என்’  என்க.  ‘வடவாறு’ என்பது தஞ்சாவூரின்
வடக்குப்புறத்தில்  ஓடும் ஓர் யாறு.   இடு-அதன் கண் அமைக்கப்பட்ட.
புனல்  மதகு-நீரையுடைய  வாய்க்கால்   தலைமதகு.  ‘நீர்  சூழ்’ என
இயையும்,  கிடங்கில்-அகழிபோல.  ‘‘இவர்க்கு’’   என்பது, முன் உள்ள
‘அகலா,   புகுந்தன,  போந்தன  வில்லை’   என்பவற்றோடு  முடியும்.
நான்கனுருபு,   ‘இவற்கு   இஃது  இயல்பு’   என்றல்போலப்  பண்புத்
தற்கிழமைக்கண் வந்தது. 


மேல்