சொல்லகராதிச் சுருக்கம்

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

22. கோயில்


217.

குருண்ட வார்குழற் கோதை மார்குயில்
   போல்மி ழற்றிய கோல மாளிகை
திரண்ட தில்லைதன்னுள் திரு
   மல்குசிற் றம்பலவன்
மருண்டு மாலை யான்ம கள்தொழ
   ஆடுங் கூத்தன் மணிபு ரைதரு
திரண்ட வான்குறங்கென் சிந்தை
   யுள்ளிடங் கொண்டனவே.                      (3)
 


217.     குருண்ட - சுருண்ட. ‘‘மிழற்றிய’’ என்னும்  இறந்த காலம்,
‘அத்தன்மையைப் பெற்ற ’ என்னும் பொருட்டு. திரண்ட -  நெருங்கிய.
திருமல்கு  -  அழகு  நிறைந்த;  இது  சிற்றம்பலத்தைச்  சிறப்பித்தது.
மருண்டு-வியந்து. மணி-மாணிக்கம். வான் குறங்கு-சிறந்த துடை. 


மேல்