சொல்லகராதிச் சுருக்கம்

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

24. கோயில்


241.

குரவம் கோங்கம் குளிர்புன்னை கைதை
   குவிந்த கரைகள்மேல்
திரைவந் துலவும் தில்லை மல்கு
   சிற்றம் பலந்தன்னுள்
வரைபோல் மலிந்த மணிமண் டபத்து
   மறையோர் மகிழ்ந்தேத்த
அரவம்ஆட அனல்கை யேந்தி
   அழகன் ஆடுமே.                            (6)
 


241. கைதை-தாழை.   குவிந்த-திரண்டுள்ள.  கரை-கடற்கரை.அதன்
இடப்பகுதிகள்    பற்றி,    ‘கரைகள்’     எனப்பலவாகக்   கூறினார்.
திரை-அலை.  ‘தில்லைச்  சிற்றம்பலம்’   என  இயையும், சிற்றம்பலம்,
இங்குக்  கோயிலைக்  குறித்தது.  மல்கு-அழகு  நிறைந்த. வரை-மலை.
மலிந்த  மணி-நிறைந்த இரத்தினங்களால்  ஆகிய, ‘மண்டபத்து ஆடும்’
என இயையும்.


மேல்