7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
25. கோயில்
251. | இறைவனை என்கதியை என்னு ளேயுயிர்ப் பாகிநின்ற மறைவனை மண்ணும்விண்ணும் மலி வான்சுட ராய்மலிந்த சிறையணி வண்டறையுந் தில்லை மாநகர்ச் சிற்றம்பலம் நிறையணி யாம்இறையை நினைத் தேன்இனிப் போக்குவனே ! (5) |
251. கதி-புகலிடம்.‘‘என்னுளே உயிர்ப்பாய்... .. ..நிற்கும்’’ என்ற அப்பர் திருமொழி இங்கு நோக்கத்தக்கது (5-21-1.) மறை-மறைந்து நிற்கும் பொருள். ‘துறைவன்’ என்பதுபோல, ‘‘இறைவன், மறைவன்’’ என்றவற்றில் வகரம் பெயர் இடைநிலை. ‘இறையனை, மறையனை’ எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். மலி-மகிழ்தற்கு ஏதுவான. ‘சுடராய் அணியாம் இறை’ எனவும், ‘மலிந்த வண்டு’ எனவும் இயையும். மலிந்த-நிறைந்த, சிறை அணி-சிறகைக் கொண்டுள்ள, ‘சிற்றம்பலத்துக்கு’ எனத் தொகுக்கப்பட்ட உருபை விரிக்க. நிறை அணி-மிக்க அழகு. போக்குவனே-என் உள்ளத்தினின்றும் போக்கி விடுவேனோ; ‘மறப்பேனோ’ என்றபடி. |