சொல்லகராதிச் சுருக்கம்

2. சேந்தனார் திருவிசைப்பா

5. திருவீழிமிழலை


56.

உளங்கொள மதுரக் கதிர்விரித் துயிர்மேல்
   அருள்சொரி தரும்உமா பதியை,
வளங்கிளர் நதியும் மதியமும் சூடி
   மழவிடை மேல்வரு வானை,
விளங்கொளி வீழி மிழலைவேந்தே’ என்
   றாந்தனைச் சேந்தன்தா தையையான்
களங்கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன்
   கைக்கொண்ட கனககற் பகமே.                  (11)
 

56.     உளம்   கொள -  உயிர்களின்   உள்ளம்  நிறையும்படி.
மதுரம்-இனிமை;    இங்குத்   தண்மைமேல்   நின்றது.   ‘தண்கதிர்’
என்றதனால்,   திங்களாய்  நிற்றல்   பெறப்பட்டது.  ‘‘கதிர்’’ என்றது.
பின்வரும்     அருளையேயாம்.     ஆம்தனை - இயலும்   அளவு.
சேந்தன்-முருகன்;  இவ்வாசிரியர் பெயரும் அதுவாதல்  கருதத் தக்கது.
களம் கொள-என்முன் வந்து தோன்றுமாறு. பிழைக்குமோ - தவறுமோ;
வாராதொழிவானோ!     கைக்கொண்ட    -   பற்றிநின்ற.    கனக
கற்பகம்-பொன்வண்ணமான     கற்பகத்தருப்போல்பவன்.  ‘‘சேந்தன்
தாதையை’’  என்றதை  ‘‘விடைமேல் வருவானை’’ என்பதன் பின்னும்,
‘‘யான்’’ என்றதை, ‘‘என்று’’ என்பதன்பின்னும் கூட்டுக.


மேல்