சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

2. கோயில்


19.

கணிஎரி, விசிறுகரம், துடி, விடவாய்க்
   கங்கணம், செங்கைமற் றபயம்
பிணிகெட இவைகண் டுன்பெரு நடத்திற்
   பிரிவிலார் பெரும்பற்றப் புலியூர்த்
திணிமணி நீல கண்டத்தென் னமுதே!
   சீர்கொள்சிற் றம்பலக் கூத்தா!
அணிமணி முறுவற் பவளவாய்ச் செய்ய
   சோதியுள் அடங்கிற்றென் அறிவே.             (8)
 

19. ‘‘பிணி  கெட’’  என்பதை  முதலிற்  கொள்க. அன்றி, இதனை
நின்றாங்கு     நிறுத்தி,    ‘‘இவை’’      என்பதனை,     ‘‘அபயம்
என்பதன்பின்      கூட்டினும்   ஆம்.     கணி  -   எண்ணத்தக்க.
விசிறுகரம்-வீசிய  கை.  துடி-உடுக்கை.  விடவாய்.   ‘விடத்தையுடைய
வாயை  உடையது’  எனப் பாம்பிற்குக்  காரணப்பெயர். திணி-செறிந்த,
‘‘மணி’’ என்றது, இங்கு அதன் நிறத்தை; எனவே,  இங்கு, ‘மணி நீலம்’
என்றே  இயைக்க.  ‘திணிநீலம்,  மணிநீலம்’  எனத் தனித்தனி சென்று
இயையும், ‘தெள்ளமுதே’ எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.  


மேல்