சொல்லகராதிச் சுருக்கம்

8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா

27. கோயில்


272.

காணீரே என்னுடைய கைவளைகள் கொண்டார்தாம்
சேணார் மணிமாடத் தில்லைச்சிற் றம்பலவர்
பூணார்வன முலைமேற் பூவம்பாற் காமவேள்
ஆணாடு கின்றவா கண்டும் அருளாரே.              (5)
 


272.      காணீர்-காணுங்கள்.      ஏகாரம்,        அசைநிலை.
சேண்ஆர்-வானத்தைப்  பொருந்திய. பூண்  ஆர்-ஆபரணம் நிறைந்த,
வனம்-அழகு.   ஆண்  ஆடுதல்-தனது   ஆண்மையை  (வீரத்தை)க்
காட்டிநிற்றல்.  சிற்றம்பலவர்  என்னுடைய   கைவளைகள் கொண்டார்;
(ஆயினும்)  காமவேள்  ஆண் ஆடுகின்றவா  கண்டும் தாம் அருளார்.
‘இது காணீரே’ எனக் கூட்டுக.


மேல்