9. சேதிராயர் திருவிசைப்பா
28. கோயில்
280. | வாணுதற் கொடி மாலது வாய்மிக நாண மற்றனள் நான்அறி யேன்இனிச் சேணுதற் பொலி தில்லையு ளீர்உமைக் காணில் எய்ப்பிலள் காரிகையே. (2) |
280, கொடி- கொடிபோன்றவள். மிக அற்றனள்-முழுதும் நீங்கினாள். ‘‘இனி’’ என்றதன்பின் ‘விளைவது’ என்பது வருவிக்க. ‘இனித் தெருவில் வந்து உம்மைத் தூற்றுவாள்’ |
என்பது குறிப்பு. நுதல்-மாளிகைகளின் நெற்றி. ‘நுதல் சேணிற்பொலி தில்லை’ என்க. சேண்-ஆகாயம். எய்ப்பு-மெலிவு. இலள்-இல்லாதவள் ஆவள். ‘ஆதலின், உமது காட்சியையேனும் அவளுக்கு வழங்குதல் வேண்டும்’ என்பது குறிப்பெச்சம். |