சொல்லகராதிச் சுருக்கம்

2. சேந்தனார் திருவிசைப்பா

7. திருவிடைக்கழி


69.

மாலுலா மனந்தந் தென்கையிற் சங்கம்
   வவ்வினான் மலைமகள் மதலை
மேலுலாந் தேவர் குலமுழு தாளுங்
   குமரவேள் வள்ளிதன் மணாளன்
சேலுலாங் கழனித் திருவிடைக் கழியில்
   திருக்குரா நீழற்கீழ் நின்ற
வேலுலாந் தடக்கை வேந்தன்என் சேந்தன்
   என்னும்என் மெல்லியல் இவளே.                (1)
 

69.     மால் உலாம் மனம் - மயக்கம் நிகழ்கின்ற மனம்.  ‘‘தந்து’’
என்றது,  ‘என்  மனத்தை அத்தன்மையதாக்கி ’ என்றவாறு.  சங்கம் -
சங்க   வளையல்,  தேவர்  அனைவரையும்  சேனைகளாக்கித்   தான்
அவற்றுக்குப்   பதியாய்   நிற்றலின்,   ‘தேவர்  குலமுழுது   ஆளும்
குமரவேள்’  என்றாள்.  குரா,  ஒரு மரம். ‘‘ என் சேந்தன்’’  என்றாள்,
காதல் பற்றி.  


மேல்