7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
23. கோயில்
228. | அலந்து போயினேன் அம்பலக் கூத்தனே! அணிதில்லை நகராளீ! சிலந்தி யைஅர சாள்கஎன் றருள்செய்த தேவதே வீசனே உலர்ந்த மார்க்கண்டிக் காகிஅக் காலனை உயிர்செக உதைகொண்ட மலர்ந்த பாதங்கள் வனமுலை மேல்ஒற்ற வந்தருள் செய்யாயே. (3) |
228. சிவபெருமான், சிலந்தியை அரசாளச் செய்தமையைக் கோச்செங்கட்சோழ நாயனார் புராணத்துக் காண்க. ‘தேவ தேவாகிய ஈசனே’ என்க. தேவ தே - தேவர்க்குத் தேவன். ‘‘தேவ தேவீசனே’’ என்ற இருசீர்களும் வேறுபட வந்தன. ‘‘உலந்த’’ என்பதற்கு, வாழ்நாள் உலந்த’ என உரைக்க. ‘‘உலத்தல் -முடிதல், ‘‘மார்க்கண்டி’’ என்பது, ‘மிருகண்டு முனிவர் மகன்’ என்னும் பொருளது. ஆகி - துணையாகி. ‘‘அக் காலனை, என்னும் சுட்டு, ‘அந்நாளில் வந்த காலனை, எனப் பொருள் தந்தது. செக-அழிக்கக்கருதி, உதைகொண்ட - உதைத்தற் றொழிலை மேற்கொண்ட. ‘உதைகொண்ட பாதங்கள், மலர்ந்த பாதங்கள்’ எனத் தனித்தனி முடியும். ‘பாதங்களால் வந்து’ என மூன்றாவது விரித்து முடிக்க. வனம் - அழகு. |
ஒற்ற-பொருந்த: தழுவுதற்பொருட்டு. ‘என் வனமுலைமேல் ஒற்ற’என்று எடுத்துக்கொண்டு, ‘‘ஈசனே’’ என்றதன்பின் கூட்டி உரைக்க. |