சொல்லகராதிச் சுருக்கம்

4. பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா

19. கோயில்


185.

முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்மேற்
றொத்து மிளிர்வனபோற் றூண்டு விளக்கேய்ப்ப
எத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில்தில்லை
அத்தனுக்கும் அம்பலமே யாடரங்க மாயிற்றே.        (1)
 

185.‘‘எத்திசையும்’’     என்பதை  முதலிற்   கொள்க.  வயிரமணி,
இருபெயரொட்டு,  தொத்து-பூங்கொத்து. இது தூண்டு  விளக்குக்களுக்கு
உவமை.  ஏய்ப்ப - பொருந்த வைக்க; ஏற்றி வைக்க.  ‘ஏய்ப்ப ஏத்தும்’
என    இயையும்.    ‘‘அத்தனுக்கும்’’    என்ற    உம்மை   சிறப்பு.
‘அவ்வம்பலமே’   சுட்டு   வருவிக்க.  ‘‘அம்பலமே’’  என்ற  ஏகாரம்,
‘பிறிதிடம்    இல்லை’    என்னும்    பொருட்டாய்,    அம்பலத்தது
சிறப்புணர்த்தி நின்றது. 


மேல்