சொல்லகராதிச் சுருக்கம்

8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா

27. கோயில்


269.

ஆடிவரும் காரரவும் ஐம்மதியும் பைங்கொன்றை
சூடிவரு மாகண்டேன் தோள்வளைகள் தோற்றாலும்
தேடிஇமை யோர்பரவும் தில்லைச்சிற் றம்பலவர்
ஆடிவரும் போதருகே நிற்கவுமே ஒட்டாரே.          (2)
 


269.  காரரவு கரும் பாம்பு. ஐம்மதி-அழகிய சந்திரன். ‘‘கண்டேன்’’
என்றதைப்   பெயராக்கி,   ‘அதனை,  ‘‘தோற்றாலும்’’ என்பதனோடு
முடிக்க.   ஆடிவருதல்,  வீதியின்கண்  என்க.  ‘நான்  வளைகளைத்
தோற்கும்  அளவிற்குக் காதல்  கரைகடந்து நிற்கவும், இவர் என்னை
அருகணையவும்    ஓட்டாது’    ஓட்டுகின்றார்;    இவர்   தம்மைக்
காதலித்தார்க்கு அருளுந்திறம் இதுதான் போலும்’ என்றபடி.


மேல்