சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

13. கங்கைகொண்ட சோளேச்சரம்


134.

உண்ணெகிழ்ந் துடலம் நெக்குமுக் கண்ணா
   ஓலம்என் றோலமிட் டொருநாள்
மண்ணின்நின் றலரேன் ; வழிமொழி மாலை
   மழலையஞ் சிலம்படி முடிமேற்
பண்ணிநின் றுருகேன் ; பணிசெயேன் எனினும்,
   பாவியேன் ஆவியுள் புகுந்தென்
கண்ணின்நின் றகலான் என்கொலோ ! கங்கை
   கொண்டசோ ளேச்சரத் தானே.                  (2)
 

134.     நெக்கு-குழைந்து.   ‘ஒருநாளும்’   என்னும்     உம்மை
தொகுத்தலாயிற்று.  வழிமொழி  மாலை-வணக்கம்  கூறுகின்ற  தமிழ்ப்
பாடற்கோவை.  ‘மாலை  பண்ணிநின்று’  என  இயையும். மழலையஞ்
சிலம்பு-இனிய      ஓசையை      உண்டாக்குகின்ற        சிலம்பு.
‘முடிமேலாக’   என ஆக்கம் வருவிக்க. ‘ஆவி, உயிருணர்வு’ என்பது
மேலும்  விளக்கப்பட்டது.  என்னோ-காரணம்  யாதோ ; ‘கருணையே
காரணம் ; பிறிதில்லை’ என்பது கருத்து. கொல், அசைநிலை.  


மேல்