சொல்லகராதிச் சுருக்கம்

4. பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா

19. கோயில்


191.

களகமணி மாடம் சூளிகைசூழ் மாளிகைமேல்
அளகமதி நுதலார் ஆயிழையார் போற்றிசைப்ப
ஒளிகொண்ட மாமணிகள் ஓங்கிருளை ஆங்ககற்றும்
தெளிகொண்ட தில்லைச்சிற் றம்பலமே சேர்ந்தனையே.  (7)
 

191.     களக மணி - நீல மணி.   மாடம் - மேல்நிலம். சூளிகை -
மேல்மாடத்தின் முகப்பு ‘மாடத்தைச் சூளிகை சூழ்ந்த  மாளிகை’ என்க.
அளக  நுதல்  - கூந்தலை உடைய நெற்றி. ‘‘மதி’’  என்றது. பிறையை.
‘மதிநுதலாராகிய  ஆயிழையார்’  என்க.  போற்றிசைப்ப   (உன்னைத்)
துதிக்க, தெளி - விளக்கம்.


மேல்