சொல்லகராதிச் சுருக்கம்

6. வேணாட்டடிகள் திருவிசைப்பா

21. கோயில்


210.

படுமதமும் இடவயிறும் உடையகளி றுடையபிரான்
அடிஅறிய உணர்த்துவதும் அகத்தியனுக் கோத்தன்றே
இடுவதுபுல் ஓர்எருதுக் கொன்றினுக்கு வையிடுதல்
நடுவிதுவோ ? திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.   (6)
 

210. படுமதம்-மிக்க மதம். இடவயிறு-இடம் பெரிதாயவயிறு. இவற்றை
யுடையகளிறு,  மூத்த  பிள்ளையார்.   ‘அயிராவணம்’ என்பாரும் உளர்.
‘‘பிரான்’’  என்றது,  ‘பிரானாகிய  நீ’ என, முன்னிலைக்கண் படர்க்கை
வந்த    வழுவமைதி.    அடி     அறிய-    உனது    திருவருளை
உணர்தற்பொருட்டு.  ‘அடி அறிய ஓத்து  உணர்த்துவது அகத்தியனுக்கு
அன்றே  எனவும்,  ‘இது  நடுவோ’   எனவும் மாற்றுக. ஓத்து-ஆகமப்
பொருள்.    சிவபெருமான்   அகத்திய    முனிவருக்கு   ஆகமத்தை
உபதேசித்தார்   என்பதும்  வரலாறு.   ‘அகத்தியனுக்கு  அந்நிலையை
அருளி,     அடியேனுக்கு     உலகியலை     அருளினாய்;    இது,
இரண்டெருதுகளை   உடைய   ஒருவன்,    ஒன்றற்குப்   புல்  இட்டு,
மற்றொன்றற்கு வைக்கோல் இடுதல் போல்வது’ என்பதாம்.


மேல்