1195
 

வாய்மை' என்னும் ஐம்பெரும் சால்பினையும் அச் சூலுற்ற மகவின்பால் வைத்துத் தம்முனைப்பாம் தலைமை தவிர்த்தனர். இல்லொழுக்க முறையாகிய கோலினை அமைத்தனர். அஃதாவது குடும்பவாழக்கையினை முறையுறச் செய்தனர் என்பதாகும். செய்யவே கிணற்றகத்துள்ள பறவைகளையொப்பப் பொறிபுலன்கள் மயங்கி நெறியல்லா நெறிச் செல்லாவாயின. எனினும் ஒரோவழி அங்ஙனம் செல்லநேரின் அஃது அவ்வுயிர்கள் முன்செய்து கொண்ட வினைக்கீடாக நேர்வதாகும். அங்ஙனம் நேரின் அருளால் அவ்வுயிர்கள் அவற்றின்பின் செல்லாது நெறிமுறையே சென்று நிலைபெறும்.

(அ. சி.) ஆலிங்கனம் செய்து - மோகத்துடன் கூடி. அகம் சுட உள் வருந்த. சூலத்து - கருப்பையில். சால் இங்கு - உடம்பை இவ் வுலகத்தில். கோல் - ஆட்சி, ஈண்டு வாழ்க்கை. கூபப் பறவைகள் - உடம்பின்கண் அமைந்த இந்திரியங்கள். மால் மயக்கம். முன்பின் முன்னர் (முன் சென்மங்களில்) இந்திரியங்களின் பின் (இந்திரியங்கள் சென்றவழியில்).

(42)

2868. கொட்டுக்குந் தாலி இரண்டே இரண்டுக்குங்
கொட்டுக்குந் தாலிக்கும் பாரை வலிதென்பர்
கொட்டுக்குந் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்
இட்டம் வலிதென்பர் ஈசன் 1அருளன்றே.

(ப. இ.) புலன் நுகர்ச்சியின் பொருட்டு இருவரும் தெய்வ அடையாளமாகிய தீ, ஆசான், சான்றவர், ஊரவர், உறவினர் முதலிய பலரும் சான்றாகத் திருமணம் செய்துகொள்கின்றனர். அங்ஙனம் செய்த உரிமையின் அடையாளமாகத் தாலி காணப்படுகிறது. ஒருவர்பால் காணப்படும் தாலி இருவர் உரிமையினையும் எடுத்தியம்புகின்றது. புலன் நுகர்ச்சியென்பது புலன்கள் தீநெறிக்கட் செல்லாது நன்னெறிக்கட் செல்லுமாறு ஒருவருக்கொருவர் துணையாகச் செலுத்தும் உரிமையை மாற்றிக் கொள்ளுதல். இது, 'கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும், ஒண்தொடி கண்ணே யுள.' (1101) என்னும் செந்தமிழ்ப் பொது மறையான் உணரலாம். ஒண்தொடிக்கு உரிமையாக்கப் பெற்ற இப்பொறிகள் என்பால் அவள் உடைமையாக இருக்கின்றன. இவற்றிற்கு உரிய முதன்மையும் உரிமையும் அவள் பாலுள்ளன. என் விழைவுபோல் பிழைபாடேதும் செய்ய இயலாது. அவள் விழைதக்கனவே யான் செய்ய இயலும். அதனாலேயே அவள் வாழ்க்கைத்துணை எனப்பட்டாள். வாழ்க்கை இம்மை, உம்மை, அம்மை என மூவகைப்படும். இம்மை - இப்பிறப்பு. உம்மை - மேற் பிறப்பு. அம்மை - பிறவாச் சிறப்பு. இவையே உரிமைத் தாலியின் அருமை பெருமையாகும். இறை நினைவு நீங்கிய உரிமைப் புலனுகர்ச்சி தோறும் விளையும் பயன் இரண்டே. அவை இன்ப துன்பம் என்பன. புலனுகர்வாகிய கொட்டுக்கும் அதன் உரிமையாகிய தாலிக்கும் மேலாகிய வன்மையுடையது பாரையாகிய விழைவென்ப புலனுகர்வு, அதன் உரிமை. வலனாம் விழைவு இம்


1. மணவன்காண். அப்பர், 5. 63 - 4.

" யாதொன்று. 12. குங்கலியக்கலயர், 9.

" அரும்பெறன், " கண்ணப்பர், 9.

" களங்கனி. புறநானூறு, 127.