கட்கு வேறாய். வெளிபுக்கு - ஆகாயத்திடை போய். வீடு உற்றான் - சீவன் முத்தி அடைந்தான். அம் அருள் - சிறந்த திருவருள். தேறா - தேறி. (42) 2307. தீண்டற் கரிய திருவடி நேயத்தை மீண்டுற் றருளால் விதிவழி யேசென்று தூண்டிச் சிவஞான மாவினைத் தானேறித் தாண்டிச் சிவனுடன் சாரலு 1மாமே. (ப. இ.) திருவருளானன்றிப் பிறவாற்றான் எய்தற்கரிய இறவாத இன்ப அன்பாகிய திருவடிநேயத்தை அருளால் மீண்டும் ஆருயிர் எய்தும். எய்தவே சிவகுரு அருளிய செவியறிவுறூஉவின்வழி அவ் வுயிர் ஒழுகும். இவ் வாற்றால் ஒருவர்க்குச் சீலம் நோன்பு என்னும் இருபெருந்தன்மையும் கைகூடும். கூடவே சிவஞானம் எய்துதற்குரிய செறிவுநெறி கைகூடும். அவ்வகைக் குறிப்பே மா என்று ஓதப்பெற்றது. மா - குதிரை. குதிரை எனக் குறிப்பது யோக வழியை யாகும். யானை எனக் குறிப்பது ஞானவழியையாகும். இக் குறிப்பே 'தூண்டிச் சிவஞான மாவினைத் தானேறி' என்று ஓதியவற்றான் உணரலாம். இச் செறிவு நெறியினையுங் கடந்து அறிவு நெறியிற் புகுந்து அந் நெறியின் எல்லையாம் சிவபெருமானின் திருவடியைச் சார்வர். சார்ந்து என்றும் இன்புறுவர். (அ. சி.) விதிவழி - குரு உபதேசப்படி. மா - பரி. (43) 2308. சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர் சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர் சார்ந்தவர் நேயந் தலைப்பட்ட ஆனந்தர் சார்ந்தவர் சத்த அருட்டன்மை 2யாரே. (ப. இ.) நன்னெறி நான்மையினர் சீலத்தர், நோன்பினர். செறிவினர், அறிவினர் என்று அழைக்கப்படுவர். அவர்களே இங்குச சாரணர், சித்தர், சமாதியர், சாத்தியர் என அழைக்கப்பெற்றனர். இவர்கள் நால்வரும் சிவபெருமான் திருவடியிணையினை முறை முறையாகச் சார்ந்தவராவர். சாத்தியராகிய அறிவினர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியரென்றோதப் பெற்றனர். இந் நான்கு நெறியினும் ஒழுகப் பெற்றவர் எண்ணரும் அன்புசேர் பண்பமர் கண்ணப்பர்போன்று காதல் அன்பு நெறியினைத் தலைப்படுவர். இவர் நேயத்தர் என ஓதப்பெற்றனர். இவரே இறவா இன்பம் தலைப்பட்டவராவர். இவர் ஆனந்தர். இவர்கள் நிலைபெற்ற திருவருட்டன்மையராவர். இவர்கள், சாரணர் சித்தர் சமாதியர் சாத்தியர், பூரண வானந்தரருளார் எனப் போற்றுப்பெறுவர். (அ. சி.) சார்ந்தவர் - சிவனைச் சார்ந்தவர். சத்த அருள் - நாத சத்தி. (44)
1. விட்டவெம்பளிச். 12. வெள்ளானை - 36. " மன்னவர். 12. தடுத்தாட். 19. 2. தொண்டர்காள். 8. திருப்படை எழுச்சி, 2. " சீலமின்றி. 8. ஆனந்தமாலை, 3.
|