1188
 

(ப. இ.) உடுக்கும் உடையும், உண்ணும் சோறும், குழாய்க் கலத்து எண்ணெயும், கழுத்தணியாகிய காறையும், அரைஞாணும், கைவளையலும் கண்டவர் அவற்றின்கண் பெருமயக்குக் கொள்கின்றனர். இவையனைத்தும் நிலையில்லாத மாயாகாரியப் பொருள்களாகும். இவற்றின் உண்மையினை உணராது இவை நிலைக்குமென மயங்கித் தடுமாற்றம் எய்துகின்றனர். அவர்கள் உள்ளம் அப் பொருள்களினிடத்து விரைந்து பறந்து செல்கின்றது. அதற்கு ஒப்புப் பாறையில் உலரும்படி விரித்த சீலை பெருங்காற்றால் பறந்து செல்வதாகும். அவ் வுயிர்கள், ஆறைக்குழியில் வீழ்ந்து அழுந்தும். ஆறைக்குழி என்பது செருக்குச் சினம் முதலாகிய (2853) ஆறுபகையுமாகும். ஆறு என்பது ஆறை என ஐகாரச் சாரியை பெற்றதாகும்.

(அ. சி.) கூறை - ஆடை. குழாய் - பாத்திரம்; (முன் காலத்தில் மூங்கில் குழாய்கள் பாத்திரமாக உபயோகப்படுத்தப்பட்டபடியால் அவ் வழக்கு இலக்கியங்களில் பயின்றது). காறை - கழத்தணி. நாணும் - அரை நாண். ஆறைக்குழி - உபத்தம்.

(29)

2855. துருத்தியுள் ளக்கரை தோன்று மலைமேல்
விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும்
வருத்தியுள் நின்ற மலையைத் தவிர்ப்பாள்
ஒருத்தியுள் ளாளவர் ஊரறி 1யோமே.

(ப. இ.) நோக்கமும் நீக்கமும் என்பன முறையே பிரவிருத்தி நிவிர்த்தி என்று பேசப்படும். இவை இரண்டும் ஒருங்கு நிகழ்வனவாகும். ஊதுந் துருத்தி காற்றை வாங்கி வெளிவிடும் கருவி. அக் கருவியே இவற்றிற்கு ஒப்பாகும். நோக்கமும் நீக்கமும் ஆகிய இச் செயல்களுள் விருத்தியாகிய நோக்கத்தினைக் கண்காணித்தற் பொருட்டு ஆருயிர்க் கிழவர் முபோதும் போவர். திருவருளம்மை உடனின்று சித்தவிருத்தியாகிய நோக்கத்தினைத் தவிர்த்தலாகிய நீக்கத்தினைப் புரிந்தருள்வள். இந் நோக்கத்தினை மலையென உருவகித்தனர். அவள் ஒப்பில்லாத பேரறிவுப் பேராற்றற் பேரருட் பெருந்திருவினளாவள். அவள் இணை பிரியாது துணையாக ஒட்டி வாழும் ஊராகிய சிவபெருமானாரை நாமாக அறியவல்லோம் அல்லோம். திருவருள் காட்டச் சேர்ந்து காண்போம் என்க. இதுவே "தாயுடன் சென்றுபின் தாதையைக்கூடி" என்பதன் பொருளாகும்.

(அ. சி.) துருத்தி - பிரவிருத்தி, நிவிர்த்தி. அக்கரை - எல்லை. மலைமேல் விருத்தி - சித்தவிருத்தி; காமாதிகள். ஒருத்தி - சிவசத்தி. ஊர் - இருப்பிடம்.

(30)

2856. பருந்துங் கிளியும் படுபறை கொட்டத்
திருந்திய மாதர் திருமணப் பட்டார்
பெருந்தவப் பூதம் பெறலுரு வாகும்
இருந்திய பேற்றினில் இ,ன்புறு வாரே.

(ப. இ.) ஆருயிர் செய்துகொண்ட வினைப் பயனுக்குத் தக்கவாறு திருவாணையால் இன்பத்துன்பங்கள் வருகின்றன. இவற்றை இன்பந்


1. உணர்ந்தார்க். 8. திருக்கோவையார், 9.