107. தனிப்பெருந் தருமந் தானோர் தயாவின்றித்
                           தானை மன்னன்
 
  பனிப்பில்சிந் தையினி லுண்மைப் பான்மைசோ
                           தித்தா லென்ன
மனித்தர்தன் வரவு காணா வண்ணமோர்                           வண்ண நல்லான்
புனிற்றிளங் கன்று துள்ளிப் போந்ததம் மறுகி
                                   னூடு.
22

     (இ-ள்.) தனிப்பெரும்...என்ன - ஒப்பற்ற பெருமையினை-
யுடைய அறக்கடவுள் சிறிதும் கருணையின்றி அரசரது துளங்காத
சிந்தையின் உண்மைத் தன்மையைச் சோதித்தற்கு வந்தாற்போல;
மனித்தர்...மருகின் ஊடு- தனது வரவைச் சூழ இருந்த பலருள்ளும்,
அந்த மணிமாட வீதியிலிருந்தாருள்ளும், எந்த மனிதரும் காணாதபடி
ஒரு அழகிய பசுவினது மிக இளைய கன்று அவ்வீதியிடைத் துள்ளிப்
புகுந்தது.

     (வி-ரை.) தனிப்பெரும் தருமம் - ஒப்பற்ற பெரிய
தருமமாகிய கடவுள் - சிறுமையினும் தனித்தன்மை யுளதாதலின்
அதனை நீக்கித் தனித் தருமம் என்னாது தனிப் பெரும் தருமம்
என்றார். அவ்வாறு பெருமைக்குணங்கள் கொண்ட பலவற்றினின்றும்
பிரித்தற்குத் தனி என்றார்.

     தருமம் - இங்குக் குறித்தது இவ்வரசன் புற்றிடங்
கொண்டார்க்கு நிபந்தம் முதலியன ஆகம வழி ஆராய்ந்து
இயற்றியது முதலிய சிவ தருமங்களின் அதி தெய்வமாகக்
கொள்ளப்படும் கடவுள் என்க. மிக மேலாகிய சிவ தருமங்களின்
முன்னே வேறு பசு பாச தர்மங்கள் எவையும் பொருளாகாமையின்
இதனையே தனிப்பெரும் தருமம் என்றார்.

     ஓர் தயாவின்றி - ஒருசிறிதும் கருணை யில்லாமல். ஒன்றும்
என்பது உம்மை தொக்கது. அறக் கடவுள் மறக் கடவுள் என்னும்படி
என்க. தருமக் கடவுளிடத்திலே இருக்கவேண்டிய ஓர் தயாவின்றி.
ஓர்த்ற்கிடமாகிய தயை இல்லாமல் என்பதுமாம். தருமம்
எஞ்ஞான்றும் தயவுடன் கூடியிருத்தல் வேண்டும் என்பதும்
எல்லாரும் ஒப்புவதாம். (Justice with mercy).

     பனிப்பில் சிந்தை - அசையாத மனத் திண்மை. “கொற்ற
ஆழி குவலயம் சூழ்ந்திட“ நின்றமைக்கும் இதுவே காரணம்; முத்தி
பெறுவதற்கும் இதுவே காரணமாயிற்று. என்னை? எல்லாக்
கருவிகளும் சிந்தையின் நிலைக்கேற்பத் தொழிற்படும். அதன்
துளக்கம் நீங்கினால், மரம் வேரற்றாற்போல, மீண்டும் கருவிச்
செயல்கள் தழையா. அவை தழையாது போகவே மேற்சென்மம்
உண்டாகாது என்க.

“துளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப் பெரும்
                                   பயனை...“

-தேவாரம் என்ற திருவாக்குக் காண்க.

     தானை என்றதனால் புறக்காவலும், பனிப்பில் சிந்தை
என்றதனால் உட்காவலும் உடையான் என்பதாம்.

     உண்மைப் பான்மை
- உள் + மை - என்றும் அழியாது
உள்ள பொருளால் நிற்பது. பான்மை அதன் இயல்பு. அரசனது
கலங்கா மனத்திலே நிலைத்துள்ள
உள்பொருளினது தன்மை. அது,
“கண்ணு மாவியு மாம்பெருங் காவல்“ என்று மேலே முதலாவதாக
எடுத்துக் கூறிய தன்மை. கழறிற்றறிவார் நாயனாரது உள்ளக்
கிடையேபோல, இவ்வரசனும் எல்லாவுயிர்க்குங் காவல்புரிதலே
கடமை என்பதைத் தன் உள்ளக்கிடையாய்க் கொண்டவன் என்க.

     சோதித்தால் என்ன - சோதிப்பதற்காக வந்ததுபோல
-
எல்லாம் அறிந்த அறக்கடவுளுக்கு மன்னனது சிந்தையின்
உண்மையைச் சோதித்து அறியவேண்டியது அவசியமில்லாமையின்
சோதிக்க என்னாது, சோதித்தாற் போல என்றார். இப்புராணத்திற்
பின்னே பல சரிதங்களிலும், இவ்வாறு நிகழ்கின்றபோது அவ்வவர்
உள்ளக்கிடையை உலகினர்க்குக் காட்டுதலே காரணம் என்று
ஆசிரியர் காட்டுவர்.

     மனித்தர் தன் வரவு காணா - மனித்தர்
- மனிதர் என்பது
எதுகை நோக்கி மனித்தர் என ஒற்று இரட்டித்தது - ‘மனித்தப்
பிறவியும்' என்பது வாகீசர் திருவாக்கு. அறக் கடவுளின் செயல்
வெறும் மனிதரது ஊனக் கண்ணிற்குப் புலப்படாமையின்
காணாவண்ணம் என்றார்.

     வண்ணம் நல் ஆன்
- நல்வண்ணம் என்று மாற்றிக் கூட்டுக.
வண்ணம் - அழகும் உருவமும். வண்ண - நல் - கன்று - என்க
புனிற்று இளம் - மிக இளமையுடைய. புனிறு - ஈன்றணிமை.

     துள்ளிப் போந்தது
- கன்று மறுகினூடு புகுந்தபடி. நடப்பன
என்னும் வகுப்பைச் சேர்ந்த அக்கன்று, நடவாமலும், தொடர்ந்து
ஓடாமலும் ஓரிடத்திருந்து மற்றோரிடத்திற்குத் துள்ளிப் புகுந்தது.
மனித்தர் அதன்வரவு காணாமைக்குக் காரணங் கூறியவாறு.

     அம்மறுகின் ஊடு
- அந்தத் தெருவுக்குள்ளே. வழிபோவார்
வந்து போதலின் தெரு மறுகு என்னப்பட்டது. தெருவின் இடையே
வரும் தேர்க்கால் தன் மீது செல்லப்பட்டதைப் பின்னே
றுகின்றமையின் மறுகின் என்னாது மறுகின் ஊடு என்றார்.

     மறுகின் ஊடே - என்பதும் பாடம்.  22