117.
|
அவ்வுரை
கேட்ட வேந்த னாவுறு துயர மெய்தி |
|
|
வெவ்விடந்
தலைக்கொண் டாற்போல் வேதனை
யகத்து
மிக்கிங்
கிவ்வினை விளைந்த வாறென் றிடருறு மிரங்கு
மேங்குஞ்
செவ்விதென் செங்கோ லென்னுந்; தெருமருந்;
தெளியுந்;
தேறான். |
32 |
(இ-ள்.)
அவ்வுரை...மிக்கு - அந்த வரலாற்றைக் கேட்ட
அரசன் பசுவடைந்த துன்பத்தையே தானுமடைந்தவனாகி விடம்
தலையின்மீது ஏறிவிட்டாற் போல
உள்ளே வேதனை மிகுந்து;
இங்கு...தேறான் - இங்கு இக்கொடுமை விளைந்தது எவ்வகை என்று
துன்பப்படுவான், இரங்குவான், ஏங்குவான், தன்செங்கோல் செவ்விது
என்று தன்னையே இகழ்ந்துகொள்வான், மனஞ் சுழல்வான், பின்
சிறிது தெளிவு கொள்வான்; ஆயினும் தேற்றத்தை
அடையமாட்டாதவனாயினான்.
(வி-ரை.)
கேட்ட வேந்தன்...துயரம் எய்தி - கேட்டபோதே
பசுவினது துன்பத்தைத் தான் அடைந்தான். இது தலையன்பின் திறம்.
முன்னரே பசுவைக் கண்டானாயினும் அதன்வரலாறு தெரியாமையின்
பொதுவகையிற் கவன்றனன். கேட்டவுடன் அதன் துயரத்தையே
தானும் அடைந்தான். அவ்வாறு அடைந்தது கண்டதனாலன்றிக்
கேட்டதனாலாயிற்று என்றுணர்க. 127 பாட்டிலே “இது தனதுறுபே
ரிடர்யானும் தாங்குவதே கருமம்“ எனத் துணிந்து மகப்பிரிவைத்
தானும் அடைய நின்றனன். பசுவின் துன்பத்தை இப்போது
அடைந்ததுவே பின் நிகழ்ச்சியிலே அரசனைச் செலுத்திற்று.
வெவ்விடம் தலைக் கொண்டாற்போல் - வெவ்விடம்
-
கொடியபாம்பின்விடம். விடங்கள் பலவாயினும், வெவ்விடம்
என்றதனாலும், தலைக்கொண்டு என்றதனாலும், பாம்பு
வருவித்துரைக்கப்பட்டது. ஏழுவேகமும் முற்றித் தலைக்கேறியது
போல என்க. தீர்த்தற்கு அரிய ஏழாம் வேகமும், அது
தலைக்கொள்வதும், அதன் தன்மையும், பிறவும், அப்பூதி நாயனார்
புராணத்துக் காண்க. பாம்பினது விடம், தொளைப்பல்லினால்
இரத்தத்தினுள் உருக்கப்பட்டு இரத்தவோட்டத்தினாலே
உடம்புமுழுதும் சுற்றும். அவ்வாறு ஒருமுறை சுற்றுவது ஒருவேகம்
என்ப. இப்படி ஏழுமுறை சுற்றுமாகில் கடைசியில் சுற்றுவது
ஏழாம்வேகம் என்பர். ஒவ்வொரு வேகத்துக்கு ஒவ்வொது தாதுவாக
உடம்பின் ஏழு தாதுக்களுள்ளும் விடம் பரவும். ஏழாம் வேகத்திலே
தலையினும் எலும்பினும் உள்ள மூளையிலும் பரவும். இதனையே
“தலைக்கொண்டாற் போல்“ என்றார். இதன்பின் இதற்குத் தீர்வு
இல்லை என்பார்.1
போல்
- அத்தன்மைபோ லாயிற்றன்றி அதன்படியே
ஆகவில்லை என்பது குறிப்பு.
வேதனை
- துன்பம். இடருறுதல் - துன்பப்படுதல்.
இரங்குதல் - கன்றை இழந்த தாயின் வருத்தத்தை நோக்கி இரக்கம்
அடைதல்.
ஏங்கும் - துன்பமாய் முடிந்து தீராநோயாயினமையால்
ஏங்கினான். தெரு மரும் - மனஞ்சுழலும். தெளியும்
-
அச்சுழற்சியிலிருந்து சிறிது தெளிவுறும். தேறான்
- சுழற்சியிற் சிறிது
தெளிதலேயல்லாது முற்றும் தெளியான் - துணிபு பெற்றானில்லை.
செவ்விது என் செங்கோல் - செம்மை
+ கோல் =
செங்கோல். பெயர் மாத்திரத்திற் செம்மையாய் இருந்துவிட்டது என்று
இகழ்ச்சி தோன்றக் கூறியதாம்.
ஆவுறு துயர மெய்தி
- பசுவினது துயரத்தை எய்தி அதன்
வண்ணமே அரசனும் ஆயினான் ஆதலின் இரங்குவன், ஏங்குவன்
என்னாது, இரங்கும், ஏங்கும், தெருமரும் என்பன முதலிய
அஃறிணைக்கும் பொருந்துவதாய வினைமுற்றுக்களாற் கூறினார்.
இங்குக் கூறியன அகத்திலே நிகழ்ந்த நிகழ்ச்சிகள்.
இவைகளுக்கேற்ற புற நிகழ்ச்சிகளை வரும் பாட்டிற் காண்க.
இவ்வினை விளைந்த ஆறு என்று இடருறும் - இச்செயல்
விளைவதற்குக் காரணம் யாது என்று துன்பப்படும். “இப்போது
நான்செய்த வினை ஒன்றுங்காணேன் அவ்வாறு என்னால்
விளைந்தது அல்லவாயின் இது பிறரால் விளைந்திருத்தல் வேண்டும்.
என் கீழ்க்குடிகளை யாவராலும் துயரமெய்தாமற் காத்தலே
செங்கோலன்றோ?“ என எண்ணி “என் செங்கோல் செவ்விது!“
என்று தன்னையே இகழ்ந்தனன் என்க.
விளைந்த வாவென்று - என்பதும் பாடம்.32
1எனது
சேக்கிழார் - 101 - 103 பக்கங்கள் பார்க்க.
|