123.
|
என்றரச
னிகழ்ந்துரைப்ப வெதிர்நின்ற
மதியமைச்சர் |
|
|
“நின்றநெறி
யுலகின்க ணிதுபோன்முன்
னிகழ்ந்ததாற்;
பொன்றுவித்தன் மரபன்று; மறைமொழிந்த
வறம்புரிதல்
தொன்றுதொடு நெறியன்றோ தொன்னிலங்கா
வல!“
வென்றார்.
|
38 |
(இ-ள்.)
என்று அரசன்...அமைச்சர் - இவ்வாறு அரசன்
அமைச்சர்களை நோக்கி அவர் கூற்றுக்களை இகழ்ந்து மறுத்துச்
சொல்ல, அதுகேட்டு எதிரே நின்ற மதிகூறும் மந்திரிகள்;
“நின்றநெறி...காவல“ என்றார் - “பழமையாய் உலகம் காவல் பூண்ட
அரசே! யாங்கள் சொல்லிய வழியிலே நின்ற நீதிநெறி இவ்வுலகியல்
வழக்கிலே இதுபோல் முன் நடந்திருக்கிறது; ஆதலின் இதற்காக
அரச குமாரனைக் கொல்வித்தல் மரபன்று; வேதத்தில் விதித்தபடி
அறம் செய்வித்தல் - அதாவது கழுவாய் வகுத்தல் -
முற்காலந்தொட்டு வழங்கிவரும் நெறியல்லவா?“ என்று வணங்கிக்
கூறினர்.
(வி-ரை.)
இகழ்ந்து உரைப்ப - மேற்பாட்டிற் கூறியபடி
இகழ்ச்சியுரை செய்ய.
மதியமைச்சர்
- மதிகூறுங் கடைமைப்பாடுடைய
அமைச்சர்கள். மதியுடையவர்கள் என்றலுமாம். தாங்கள் சொல்லியது
இகழக் கூடியது அன்று எனவும், முன்னிகழ்ச்சியும், விதியும்,
வழக்கமும், ஆகிய ஆதரவுகள் கொண்டே கூறப்பெற்றது எனவும்,
அமைச்சர் குறித்தனர் என்க. அறியாது சொன்னோம் அல்லோம்
என்றபடி.
காவல -
121-வது பாட்டில் மந்திரிகளை நோக்கிக் காவலன்
ஆவான் இவன் - என்ற இலக்கணத்தை அரசன் குறித்தானாதலின்
- மந்திரிகளும் அப்பெயராலே அவனை விளித்தது
அவ்விலக்கணத்தை அறிந்தே விதிநெறி சொல்கின்றோம் என்பதற்கு.
அறம் புரிதல் -
மொழிந்த அறத்தின் வழி நிறுத்துதல்.
தொன்று தொடுநெறி -
பழங்காலம் முதல் வழங்கிக்கொண்டு
வந்த நெறி.
பின்வரும் பாட்டின் தொழுது என்பதனால், வணங்கி என
-
இங்கு வருவித்துரைக்கப்பட்டது. 38
|
|
|
|